Search
Thursday 15 November 2018
  • :
  • :

அஜித்துடன் மீண்டும் இணையும் யுவன்சங்கர்ராஜா

அஜித்துடன் மீண்டும் இணையும் யுவன்சங்கர்ராஜா

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்கவேட்டை’, ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது.

உண்மையில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லை, யுவன் சங்கர் ராஜாதான்.

ஏற்கெனவே அஜித்துடன் தீனா, பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம் ஆகிய 5 படங்களில் இசை அமைப்பாளராக பணிபுரிந்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் 6-வது முறையாக இணைகிறார்!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better