Search
Friday 22 February 2019
  • :
  • :

‘ரெமோ’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் உடன் யோகிபாபு

‘ரெமோ’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் உடன் யோகிபாபு

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான காமெடியன் சதீஷ்தான். தற்போது யோகிபாபுவுக்கு மார்க்கெட் இருப்பதால் அவரை பிரதான காமெடியனாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படத்தில் ராதிகா சரத்குமாரும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ராதிகா நடிப்பதாக தகவல் அடிபடுகிறது.

ராதிகா சரத்குமார், யோகிபாபு இருவரில் ‘யோகி’பாபு ஏற்கெனவே சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ படத்தில் நடித்துள்ளார்.

ராதிகா சரத்குமார் சிவகார்த்திகேயனுடன் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. இந்தப்படத்தில்தான் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better