Search
Friday 19 October 2018
  • :
  • :

வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரை வாரிய ஆர்யா…!

வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரை வாரிய ஆர்யா…!

ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் அந்தப்படம் வெற்றியடைந்தால் மட்டுமே அதே ஹீரோவை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும்.

ஒருவேளை படம் தோல்வியடைந்தால் அந்த ஹீரோ பக்கமே திரும்பாது.

இதுதான் திரையுலகில் நடந்து கொண்டிருக்கும் யதார்த்தமான நிலவரம்.

படம் தயாரிப்பது வியாபாரம் என்பதையும் மீறி, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் கதைக்குப் பொருத்தமான ஹீரோவைத்தேடும் மனோபாவம் கொண்ட தயாரிப்பாளர்களும் அரிது.

இந்த விஷயங்களுக்கு மாறாக, திரையுலக யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு படம் எடுத்து வரும் நிறுவனங்களில் யுடிவி நிறுவனமும் ஒன்று.

இதன் தென்னக பொறுப்பு அதிகாரியான தனஞ்செயன் அடிப்படையில் சினிமா ரசிகர் என்பதால் கதைக்குப் பொருத்தமான ஹீரோவை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பார்.

அந்த அடிப்படையில்தான் ‘வேட்டை’, ‘சேட்டை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களின் ஹீரோவாக ஆர்யாவை தேர்வு செய்திருந்தார்.

யுடிவி நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா நடித்த ‘வேட்டை’, ‘புறம்போக்கு’, ‘சேட்டை’ ஆகிய மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

ஆனாலும் விஷ்ணுவர்தனை இயக்குநராக வைத்து தயாரித்துள்ள ‘யட்சன்’ படத்துக்கும் ஆர்யாவையே கதாநாயகனாக்கினார்.

மூன்று தோல்விப்படங்கள் கொடுத்த பிறகும் தனக்கு பட வாய்ப்பு கொடுத்த அந்த நிறுவனத்தை நன்றியோடு நினைக்க வேண்டிய ஆர்யாவோ, தொடர்ந்து ப்ளாப் கொடுத்ததை கிண்டல் பண்ணும் வகையில் சமீபத்தில் நடந்த ‘யட்சன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், ”எவ்வளவு அடிச்சாலும் தாங்குற கம்பெனி” என்று யுடிவியை கிண்டல் செய்தார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better