Search
Sunday 20 May 2018
  • :
  • :

கூத்துப்பட்டறையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு…!

கூத்துப்பட்டறையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு…!

ஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கும் படம் – “யானும் தீயவன்”.

சிம்பு நடித்த ‘போடா போடி’ மற்றும் இயக்குநர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரசாந்த் இப்படத்தை இயக்குகிறார்.

நாளைய இயக்குனர் சீசன் – 3 ல் பங்கேற்று பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இவர்.

‘யானும் தீயவன்’ படத்தில் புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும், முன்னணி வழக்கறிஞருமான ஜெரோம் புஷ்பராஜின் மகன்.

என்ஜினியரிங் படித்துவிட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைபார்த்த அஸ்வின், நடிப்பு மீது கொண்ட விருப்பத்தினால் வேலையை உதறிவிட்டு நடிகராக களமிறங்குகிறார். நடிப்பை முறைப்படி கற்று வர வேண்டும் என்பதற்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துள்ளார்.

நடனமும் கற்றுள்ள அஸ்வின் சொந்தமாக ஒரு நடனக்குழுவையும் வைத்திருக்கிறாராம்.

ராம்போ விமல் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி, ஜிம் என ஒரு ஹீரோவுக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்.

சில தெலுங்குப் படங்களில் நடித்த வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார்.

டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விடிவி கணேஷ், பொன்வன்னன் உட்பட பலரும் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.

சரி… கதை?

“இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை. சுவாரஸ்யமாகவும் புதுசாகவும் இருக்கும்.” என்கிற இயக்குனர் பிரசாந்த், முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் “யானும் தீயவன்” படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்றும் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்சேதுபதி, விமல், பசுபதி, விதார்த் என எத்தனையோ திறமைசாலிகளைத் தந்த கூத்துப்பட்டறையிலிருந்து வந்துள்ள அஸ்வின் இவர்களின் வரிசையில் இடம்பிடிப்பார் என்று நம்பலாம்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better