Search
Sunday 18 November 2018
  • :
  • :

விஸ்வாசம் தேர்ட்லுக் வருமா?

விஸ்வாசம் தேர்ட்லுக் வருமா?

அஜீத்தை வைத்து வீரம் விவேகம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்போது நான்காவது முறையாக அஜித்தை வைத்து விசுவாசம் படத்தை இயக்கி வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு விசுவாசம் படத்தின் செகண்ட்லுக்கை வெளியிட்டனர்.

விசுவாசம் படத்தின் செகண்ட்லுக் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

விஜய் ரசிகர்கள் விசுவாசம் படத்தின் செகண்ட்லுக்கை கடுமையாக நக்கலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களே விசுவாசம் படத்தின் செகண்ட்லுக் தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

இதை அடுத்து விரைவில் விசுவாசம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிடும்படி படநிறுவனத்திடம் அஜித் தெரிவித்ததாக ஒரு தகவல் அடிபடுகிறது. அதுமட்டுமல்ல அந்த போஸ்டரை டிசைன் செய்து தன்னிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்றும் சொன்னாராம்.

அதற்கான ஏற்பாடுகளை படநிறுவனம் தற்போது செய்து வருகிறது. இதற்கிடையில் விசுவாசம் படம் பொங்கலுக்கு வெளிவராது என்ற தகவல் படத்துறையில் பரவலாக அடிபட்டு வருகிறது.

காரணம் ரஜினி நடிக்கும் பேட்ட படம் வெளிவருவதால் விசுவாசம் படத்துக்கு தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுவிடுமோ என்ற தயக்கம் காரணமாக விசுவாசம் படத்தை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விசுவாசமும் பேட்ட படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகும் என்றும் ஒரு புதிய தகவல் அடிபடுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better