Search
Monday 19 February 2018
  • :
  • :

ராகவா லாரன்ஸிடம் டாக்டர் சர்ட்டிஃபிகேட் கேட்டது யார்?

ராகவா லாரன்ஸிடம் டாக்டர் சர்ட்டிஃபிகேட் கேட்டது யார்?

தான் நடித்த படம் குறிப்பிட்ட தேதியில்  ரிலீஸ் ஆகாமல்போனால் அந்தப் படத்தின் ஹீரோ நிச்சயமாக வருத்தப்படுவார் என்பதுதான் யதார்த்தம்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படம் கடந்த பொங்கல் அன்று திரைக்கு வந்திருக்க வேண்டிய படம்.

விஜய் நடித்த பைரவா படம் அதிக தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொண்டதால் ‘சிவலிங்கா’ படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல்போனது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் என்றாலும் பைரவா ஃபீவருக்கு முன்னால் சிவலிங்கா படத்தினால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

எனவே வேறு வழியில்லாமல், பொங்கல் அன்று ரிலீசாக கடந்த 15 ஆம் தேதி வரவிருந்த சிவலிங்கா படத்தை ஒருவாரம் தள்ளி வைத்து ஜனவரி 26 அன்று வெளியிட முடிவு செய்திருந்தனர்.

அதன் பிறகு, சிவலிங்கா படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

அதாவது, ஜனவரி 26 அன்று வெளிவருவதாக சொல்லப்பட்ட சிவலிங்கா படம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தான் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி இப்படி தள்ளிப்போவதை எண்ணி மற்ற ஹீரோக்களாக இருந்தால் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார்கள்.

ஆனால்  சிவலிங்கா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதில் அப்படத்தின் ஹீரோவான ராகவா லாரன்ஸுக்கு வருத்தம் இருக்க வாய்ப்பே இல்லை.

மாறாக, மனம் கொள்ளாத அளவுக்கு மகிழ்ச்சியே நிறைந்திருக்கும்.

ஏன்…

ஏற்கனவே திட்டமிட்டபடி பொங்கல் அன்று சிவலிங்கா வெளியாகி இருந்தால் பத்தோடு பதினொன்றாக தியேட்டரைவிட்டுப்போயிருக்கும்.

இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.

மாணவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு கலையுலகை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

ragava lawrence dr certificate1

அப்படி ஆதரவு தெரிவிக்க மெரீனாவுக்கு வந்த ராகவா லாரன்ஸ் என்ன நினைத்தாரோ மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராடி வந்தார்.

இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், மீண்டும் மெரீனாவுக்கு வந்தார்.

ஒரு வாரம் சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கேட்காமல், மெரீனா பீச்சுக்கு வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டதை பலரும் பாராட்டினார்கள்.

ஆனாலும், ராகவா லாரன்ஸை போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் நம்பவில்லை.

சினிமாக்காரர்களின் செயலில் நிச்சயம் சுயநலம் இருக்கும் என்ற அடிப்படையில்,  அவர் நடித்த சிவலிங்கா படம் வெளிவர இருப்பதால் அதற்கு பப்ளிசிட்டி தேடத்தான் மெரீனாவுக்கு வந்து சீன் போடுகிறார் என்று கமெண்ட் அடித்தனர்.

அதை ஆமோதிக்க வேண்டியநிலைக்கு ராகவா லாரன்ஸே நம்மை எல்லாம் தள்ளிவிட்டார்.

மருத்துவமனையிலிருந்து டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கி மீடியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதிலிருந்தே இவரது  ‘நோக்கத்தை’ புரிந்து கொள்ள முடிகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better