Search
Friday 14 December 2018
  • :
  • :

ரசிகர்களை அவமானப்படுத்திய அஜித்…

ரசிகர்களை அவமானப்படுத்திய அஜித்…

சிவா இயக்கத்தில் ஏற்கனவே அஜித் நடித்த படத்துக்கு வீரம் என்று பெயர் வைத்திருந்தார் இயக்குநர் சிவா.

அந்தப் படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை படம் பார்த்தபோது தெரிய வந்தது.

தற்போது அஜித்தை வைத்து இயக்கி வரும் படத்துக்கு ‘விவேகம்’ என பெயர் வைத்திருக்கிறார் சிவா.

காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாகவே சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது.

அண்மையில் மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில காட்சிகளை படமாக்கி வந்தனர்.

ரிலீஸ் தேதிக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் படத்தின்  தலைப்பை அறிவிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் அஜித்.

ஆனால்  வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தின் தலைப்பை ரிலீஸ் தேதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்க வைத்திருக்கிறார்.

இப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த புதிய படத்தின் தொடக்கவிழா நேற்று  நடைபெற்றது.

ரஜினிக்குப் பிறகு வசூலில் நம்பர் ஒன்னாக இருக்கும் விஜய்யின் புதிய படம் தொடங்கப்படுவதால் அதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்.

சமூக ஊடகங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் அதை முக்கிய நிகழ்வாக கொண்டாடுவார்கள்.

இதற்கு உலைவைக்கும் திட்டத்திலேயே  படத்தின் ரிலீஸ் தேதிக்கு பல மாதங்கள் இருக்கும்நிலையில் தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட வைத்திருக்கிறார் அஜித்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நடுராத்திரியில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதன்படி விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் நடுராத்திரியில்தான் வெளியிடப்பட்டது.

தல57 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை காண அஜித்தின் ரசிகர்கள் தூங்காமல் கண்விழத்து காத்திருந்தனர்.

விவேகம் ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்ததும்  ரசிகர்கள் அதிர்ச்சியிலும் அப்செட்டிலும் துவண்டுபோய்விட்டனர்.

தல தல என்று நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் நம்ம ஹீரோவின் ஃபர்ஸ்ட்லுக் போட்டோஷாப்பில் தலையை ஒட்ட வைத்த ஃபர்ஸ்ட்லக்காக இருக்கிறதே என்பதே ரசிகர்களின் அப்செட்டுக்குக் காரணம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better