Search
Thursday 16 August 2018
  • :
  • :

விசுவாசம் படத்தில் 3 காமெடியன்கள்

விசுவாசம் படத்தில் 3 காமெடியன்கள்

விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விசுவாசம்.

விவேகம் படம் வணிகரீதியில் தோல்வியடைந்ததால் அப்படத்தினால் நஷ்டப்பட்ட ’சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துக்கு அஜித் மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்.

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்குவதாக இருந்தது.

ஸ்கிரிப்ட் இன்னும் ரெடியாகததினால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இசை அமைப்பாளராக டி.இமான் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகிய 3 காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள்.

என்றாலும் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

படப்பிடிப்பு துவங்கும்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better