Search
Sunday 18 November 2018
  • :
  • :

மீண்டும் தள்ளிப்போகும் விஸ்வாசம்…

மீண்டும் தள்ளிப்போகும் விஸ்வாசம்…

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் இது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ரமேஷ் திலக் என பெருங்கூட்டமே நடித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக சென்னை, ஹைதராபாத், மும்பை என பல்வேறு ஊர்களில் மிக விறுவிறுப்பாக நடந்து வந்த ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நவம்பர் முதல் வாரத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

விஸ்வாசம் படம் தொடங்கப்பட்டபோது தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியாவதை ஒட்டி விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு தள்ளி வைத்தனர்.

இப்போதுவரை விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவே திட்டமிட்டிருக்கின்றனர்.

ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

எனவே ‘விஸ்வாசம்’ படத்தை சில வாரங்கள் தள்ளி ரிலீஸ் செய்யலாமா என்று தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better