Search
Sunday 17 February 2019
  • :
  • :

அஜித் பட வாய்ப்பு ரோபோ சங்கருக்கு எப்படி வந்தது?

அஜித் பட வாய்ப்பு ரோபோ சங்கருக்கு எப்படி வந்தது?

அஜித் – சிறுத்தை சிவா இருவரும் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விசுவாசம்’.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில். தம்பி ராமையா, யோகிபாபு என ஏற்கனவே இரண்டு காமெடியன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில் லேட்டஸ்டாக ரோபோ சங்கரும் தற்போது விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார்.

அஜித்தின் நண்பராக படம் முழுக்க அவர் கூடவே வரும் காமெடி கேரக்டரில் நடிக்கிறார் ரோபோ சங்கர்.

இந்தப்படத்தில் நடிப்பதற்காக சுமார் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரோபோ சங்கர்.

”இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்தது இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில்தான் பார்க்கப் போறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன்.” என்கிறார் ரோபோ சங்கர்.

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விருதுவிழாவில் நடிகர் விஜய்யிடம் உங்கள் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று பகிரங்கமாக கேட்டார் ரோபோ சங்கர்.

விஜய் பதில் சொல்லாமல் போனார். இந்த சம்பவத்துக்குப் பிறகே விசுவாசம் படத்தில் ரோபோ சங்கருக்கு சான்ஸ் கொடுக்கும்படி இயக்குநர் சிவாவிடம் அஜித் சொன்னாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better