Search
Sunday 16 December 2018
  • :
  • :

நடிகர் சங்கத்தில் இரட்டை வேடம்…

நடிகர் சங்கத்தில் இரட்டை வேடம்…

சில வாரங்களுக்கு முன் மலையாள நடிகை பாவனாவை, அவரது கார் டிரைவர் உதவியுடன் சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக செய்தி வெளியானது.

அதற்கு கண்டனம் தெரிவித்து மலையாளப்பட உலகை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பாவனா தமிழ்ப்படங்களில் கூட நடித்திருக்கிறார் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினரும் தங்கள் பங்குக்கு பாவனாவுக்கு ஆதரவும், நடைபெற்ற சம்பவத்துக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு இங்கேயே ஒரு பூகம்பம் வெடித்தது.

அதாவது, கேளிக்கை என்ற பெயரில் இங்குள்ள நடிகர், நடிகைகள் செய்து வரும் ‘பெரிய இடத்து விபசாரத்தை’ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தினார் பின்னணி பாடகியான சுசித்ரா.

தனுஷ், ஆண்டரியா, அமலாபால், த்ரிஷா, ஹன்சிகா, சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகர், நடிகைகள் குடித்துவிட்டு கூத்தடிப்பது குறித்த தகவல்களையும், அங்கே எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களையும், நடிகைகளின் நிர்வாண வீடியோக்களையும் அடுத்தடுத்து வெளியிட்டார்.

திரையுலத்தினரை மட்டுமல்ல மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது – அந்த சம்பவம்.

சமுதாயத்தில் சினிமா நடிகர் நடிகைகளுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ரா வெளியிட்ட  நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள்  சினிமாக்காரர்களை இன்னும் கேவலப்படுத்திவிட்டது.

இந்த சம்பவம் குறித்து நடிகர் சங்கம் வாய் திறக்கவில்லை.

அண்மைக்காலமாக வாய்சவடால் வீரராகிவிட்ட விஷாலோ அவரது காதலி வரலட்சுமியின் சேவ்சக்தி நிகழ்ச்சிக்கு வந்தபோது, சுசித்ரா வெளியிட்ட படங்கள் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் என்றும், அதை வெளியிட்டவர்களை இன்னும் ஒரே மாதத்தில் கண்டுபிடித்துக்காட்டுவதாகவும் சவால்விட்டுவிட்டுப்போனார்.

நாம் சொல்வதை எல்லாம் மக்கள் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஷால் போன்றவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better