Search
Saturday 16 February 2019
  • :
  • :

1.5 கோடி வேண்டாம்… விஷாலின் அதிரடி அறிவிப்பு

1.5 கோடி வேண்டாம்… விஷாலின் அதிரடி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் இந்தவாரம் ரிலீஸாகியிருக்கும் ‘96’ படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக் காதலன்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘வீரசிவாஜி’, ‘கத்தி சண்டை’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தை வாங்கி வெளியிட்டது.

ரிலீஸ் சமயத்தில் சில படங்களுக்கு பைனான்ஸ் பிரச்சினை வருவது போல, ‘96’ படத்துக்கும் பிரச்சினை வந்தது.

96 படத்தின் மூலம் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் வீரசிவாஜி, ‘கத்தி சண்ட’ படங்களினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, ‘96’ படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

சுமார் 4.5 கோடியை விஜய்சேதுபதி செட்டில் பண்வதாக எழுதிக்கொடுத்த பிறகு  96 படத்தை வெளியிட பைனான்ஸியர் அனுமதி கொடுத்தார்.

4.5 கோடியில் 1.5 கோடி தயாரிப்பாளர் நந்தகோபால் கத்திச்சண்டை படத்தின்போது விஷாலுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி. அதாவது தயாரிப்பாளருக்காக 2.70 கோடி கடனை விஷால் ஏற்றுக்கொண்டார். அதற்கான வட்டியும் சேர்த்து 3.5 கோடியை விஷாலுக்கு நந்தகோபால் தரவேண்டும். அதைத்தான் 96 பட வெளியீட்டின்போது விஷால் கேட்டார்.

இந்த விஷயத்தில் விஷாலை கெட்டவராக சித்தரித்து தயாரிப்பாளர்கள் வாய்ஸ் கொடுக்க, இன்னொரு பக்கம் மீடியாக்களில் செய்திகள் வர, வெறுத்துப்போன விஷால் தனக்கு விஜய்சேதுபதி தருவதாக ஒப்புக்கொண்ட 1.5 கோடியை தர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better