பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. ‘வனமகன்’ அறிமுகநாயகி சயீஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ பிரியா பவானிசங்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதாவது கார்த்தியை ஒருதலையாக காதலிக்கும், அவரது மாமாபெண்ணாக நடித்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக கார்த்தி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் கடைக்குட்டி சிங்கம் படம் வெளிவரஉள்ளநிலையில், புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இந்தப்படத்தைத் தொடர்ந்து இரும்புத்திரை படத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.
பி.எஸ். மித்ரனை கார்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்து அவரிடம் கதை கேட்கும்படி சிபாரிசு செய்தது யார் தெரியுமா? விஷால்.
அனேகமாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தில் கௌரவ வேடத்தில் விஷால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.