Search
Monday 22 October 2018
  • :
  • :

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்…

கடந்த சில வாரங்களாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்து வந்த நடிகர் விஷால் உடல்நலக்குறைவால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று முதலில் தகவல் கசிந்தது.

பின்னர் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில் கேரளாவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷால்.

‘என் உடல்நிலை குறித்தும், நான் ஒரு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்திகளில் உண்மையில்லை.

எனக்கிருக்கும் ஒற்றைத்தலைவலி நோய்க்காகவே தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்! ஒரு சில நாட்களில் அந்த சிகிச்சை முடிந்துவிடும்.

அதனை தொடர்ந்து மிக விரைவில் அதாவது மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னெ வந்து விடுவேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் மூலம் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி விஷால் வைத்துவிட்டாலும் அவர் சொல்வதை மக்கள் நம்பணுமே!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better