Search
Thursday 19 July 2018
  • :
  • :

நட்சத்திர கலைவிழாவை தன்னுடைய படத்துக்கு பயன்படுத்துவதா ?

நட்சத்திர கலைவிழாவை தன்னுடைய படத்துக்கு பயன்படுத்துவதா ?

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

தொடர்ந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இரும்புத்திரை படத்தின் டிரைலரை மலேசியாவில் வருகிற 6- ஆம் தேதி நடைபெறவிருக்கும் நட்சத்திர கலை விழாவில் வெளியிடவிருக்கிறார்கள்.

இந்த படத்துடன் விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் டீசரையும் மலேசியாவில் நடைபெறும் கலைவிழாவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் கூட முடிவடையவில்லை.

அதற்குள் சண்டக்கோழி- 2 படத்தின் டீசரை அவசரஅவசரமாக வெளியிட வேண்டிய அவசியம் எனன?

அன்புச்செழியனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததால் விஷால் நடிக்கும் படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு அவருடைய நிழலாகவே இருந்த அவருடைய மானேஜர் முருகராஜ் தற்போது விலகிவிட்டார்.

இதனால் இந்த படத்தை முடிக்க போதுமான பணம் இல்லாமல் திணறிவருகிறார் விஷால்.

சண்டக்கோழி-2 படத்தின் டீசரை மலேஷியாவில் வெளியிட்டால் அங்குள்ளவர்களிடம் பைனான்ஸ் திரட்டலாம் என்ற எண்ணத்திலேயே மலேசியாவில் நடைபெறும் கலைவிழாவின் சண்டக்கோழி-2 டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் விஷால்.

நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டும்கலைவிழாவை தன்னுடைய படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துவதா என் முணுமுணுப்பும் தற்போது கேட்க ஆரம்பித்துள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better