Search
Friday 23 February 2018
  • :
  • :

மீடியாக்களை சந்திக்க தயங்கும் விக்ரம்….

மீடியாக்களை சந்திக்க தயங்கும் விக்ரம்….

பொங்கலுக்கு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவாவின் ’குலேபகாவலி’, விமல் நடித்துள்ள ‘மன்னர் வகையறா’, விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள ‘மதுரவீரன்’ ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டது.

கடைசியில்’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மன்னர் வகையறா’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து திடீரென்று பின் வாங்கிவிட்டன. 3 படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.

இவற்றில் ஸ்கெட்ச் படம் 30 கோடி டெஃபிசீட்டில் வெளியாகியுள்ளது. அதாவது படம் பிசினஸ் ஆகாமல் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில்தான் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க, அஜித் ஜெய்யைப்போல் ஸ்கெட்ச் படத்தின் ஹீரோவான விக்ரம் புரமோஷனுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் தயாரிப்பாளரை டார்ச்சர் பண்ணியுள்ளார்.

புரமோஷனுக்காக கேரளாவுக்கு சென்றவர் தமிழ்நாட்டில் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டாராம்.

தன்னையும் அஜித் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better