Search
Saturday 20 October 2018
  • :
  • :

திருமணத்தில் அம்மா தென்படவில்லை ஏன்?

திருமணத்தில் அம்மா தென்படவில்லை ஏன்?

நடிகர் விக்ரம் உடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

அந்த திருமணத்தின்போது, முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தது முதல் மணமேடையில் மகளுடன் இருந்ததுவரை எல்லா இடங்களிலும் விக்ரம் மட்டுமே இருந்தார்.

தன்னுடைய மகளின் திருமணத்துக்கு திரையுலகில் உள்ள பலரை விக்ரம் அழைக்கவில்லை. மிகச் சில செலிபிரிட்டிகளை மட்டும் தானே நேரில் சென்று அழைத்திருக்கிறார் விக்ரம். அப்போதும் கூட அவரது மனைவி ஆப்சென்ட்.

கலைஞர் கருணாநிதி வீட்டில் திருமணம் நடைபெற்றபோது கூட பெண் வீட்டின் சார்பில் விக்ரம் மட்டுமே இருந்தார். திருமதி ஷைலஜா விக்ரம் எங்குமே தென்படவில்லை.

பாண்டிச்சேரிக்கு அருகில் திருமண வரவேற்பு நடைபெற்றபோதும் திருமதி. ஷைலஜாவைப் பார்க்க முடியவில்லை என்கின்றனர் அங்கே சென்று வந்தவர்கள்.

பெத்த மகளின் கல்யாண வைபோகத்தில் அம்மா கலந்து கொள்ளவில்லை என்றால்?

சீக்கிரமே மீடியாக்களுக்கு பரபரப்பு செய்தி நிச்சயம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better