Search
Sunday 24 February 2019
  • :
  • :

விஜய்சேதுபதியின் லிஸ்டில் மேலும் 4 புதுப்படங்கள்

விஜய்சேதுபதியின் லிஸ்டில் மேலும் 4 புதுப்படங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ மாமனிதன், சிந்துபாத் உட்பட அரைடஜன் படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் மற்றொரு படமும் உருவாகிறது.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரனுடன் பணிபுரிந்தவர் டெல்லி பிரசாத்! இவர் இயக்குனராக அறிமுகமாகும் ‘துக்ளக்’ படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி!

இந்த படத்தை விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘96’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ‘7 கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் தவிர எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவை தவிர விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்திலுத் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க 4 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஜூன் மாதம் முதல் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better