Search
Thursday 21 June 2018
  • :
  • :

வட்டத்துக்குள் சிவகார்த்திகேயன்… நட்பு வட்டத்துக்குள் விஜய்சேதுபதி

வட்டத்துக்குள் சிவகார்த்திகேயன்… நட்பு வட்டத்துக்குள் விஜய்சேதுபதி

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘ரெமோ’ படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி வெளியானது.

தொடர் விடுமுறையில் படம் வெளியானதால் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

அதே ஃபார்முலாவில் அதாவது தொடர்விடுமுறை நாட்களை குறிவைத்து தற்போது சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ படத்தையும் ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

அனிருத் 2 பாடல்களைத்தராதது ஒருபக்கம், இரண்டு படங்களுக்கான நீளத்துடன் எடிட்டிங் வெர்ஷன் இருப்பது இன்னொரு பக்கம் என வேலைக்காரன் பட வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையவில்லை.

எனவே இந்தப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், பேட்டியளிக்கவில்லை.

செய்தியாளர்கள் கேள்வி கேட்கவும் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

சினிமாவுக்கு வந்து ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பாராமுகம் காட்ட ஆரம்பித்தார் அஜித்.

சிவகார்த்திகேயன் தன்னையும் அஜித் என்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ, சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்து ஐந்து வருடத்துக்குள்ளே மீடியாக்கள் தன்னை நெருங்காத அளவுக்கு தன்னைச்சுற்றி வட்டம் போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

இவரது போட்டியாளரான விஜய்சேதுபதியோ செய்தியாளர்களுடன் மிக நட்புடன் பழகி வருகிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better