Search
Sunday 20 January 2019
  • :
  • :

7 கெட்டப்பில் நடிக்கும் விஜய்சேதுபதி….

7 கெட்டப்பில் நடிக்கும் விஜய்சேதுபதி….

அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் – ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டநிலையில் படபணிகள் முடிவடையாததினால் பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வெளியான படங்கள் வர்த்தகஅளவில் வெற்றிபெற்றதையடுத்து இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.

முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்களின் சாட்லைட் உரிமையை சமீபகாலமாக சன் டிவி நிறுவனம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இன மக்களின் தலைவனாக நடிக்கிறார்.

தவிர முற்றிலும் மாறுபட்ட 7 கெட்-அப்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகரிகா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better