Search
Tuesday 21 August 2018
  • :
  • :

மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி…

மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி…

இன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதிதான்.

தமிழில் ‘செக்கச் சிவந்த வானம்’, ‘ஜுங்கா’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’, ‘96’, ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம், சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் படம் என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு சிரஞ்சீவி நடிக்கும் ‘சாய் ரா நரசிம்மரெட்டி’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும்நிலையில் கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

ஷிவ்கணேஷ் இயக்கும் ‘அக்காடா’ என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி!

அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better