Search
Sunday 21 October 2018
  • :
  • :

கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி

கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி

கால்ஷீட் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கால்ஷீட் கொடுப்பது விஜய்சேதுபதிதான்.

அதிலும் குறிப்பாக தன்னுடைய ஆரம்பகாலத்தில் யாரெல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்களோ அவர்களுக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்வதில்லை.

அதனால்தான் விஜய்சேதுபதி நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த வருடம் மட்டுமே அவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகியுள்ளன.

‘புரியாத புதிர்’, ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘வட சென்னை’ என அடுத்த வருடத்திலும் பல படங்கள் வர வாய்ப்புள்ளது.

கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய்சேதுபதி, மீண்டும்  ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிரார்.

ஜீவா நடிப்பில் ‘ரௌத்திரம்’ படத்தை இயக்கிய கோகுல் தனது இரண்டாவது படமாக ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தில்தான் முதன் முதலாக விஜய்சேதுபதியுடன் இணைந்தார்.

அதன் பிறகு கார்த்தி, நயன்தாரா நடிப்பில் தனது மூன்றாவது படமாக ‘காஷ்மோரா’வை இயக்கினார் கோகுல்.

இந்நிலையில் இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் விஜய்சேதுபதியும், கோகுலும் ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர்.

இப்படத்தின் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார் கோகுல்!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better