Search
Sunday 24 February 2019
  • :
  • :

விஜய்ஆண்டனியின் கொலைகாரன் கதை ரகசியம்

விஜய்ஆண்டனியின் கொலைகாரன் கதை ரகசியம்

விஜய் ஆண்டனி நடிகராக அறிமுகமானபோது அவருடைய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைந்து வந்தன. குறிப்பாக பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலில் சக்கைப்போடுபோட்டது.

அதன் பிறகு அவர் நடித்த சைத்தான், அண்ணாதுரை, காளி போன்ற படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தன.

கடைசியாக அவர் நடித்த திமிரு புடிச்சவன் படமும் தோல்விப்படமானது.

இதன் காரணமாக இனி சொந்தப்படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் வெளி தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

தற்போது அவர் 3 படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம் கொலைகாரன். இப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கமல் நடித்த த்ரிஷ்யம் படம் த டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலை தழுவி உருவான சஸ்பெக்ட் எக்ஸ் என்ற ஜப்பானிய படத்திலிருந்து கதையை காப்பியடித்ததாக தகவல் வெளியானது.

த டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் நாவலாசிரியரிடமிருந்து முறைப்படி ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் த்ரிஷ்யம் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த நாவலின் கதையைத்தான் விஜய்ஆண்டனி தற்போது கொலைகாரன் படமாக எடுத்து வருகிறார்.

கொலைகாரன் படம் திரைக்கு வரும்போது நிச்சயம் பிரச்சனைதான்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better