Search
Tuesday 11 December 2018
  • :
  • :

புரமோஷனுக்கு புதிய உத்தி

புரமோஷனுக்கு புதிய உத்தி

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இந்த படம் சம்பந்தமாக புதியபுதிய விளம்பர யுக்தியை கையாண்டு வருகிறார்கள்.

அதன் அடுத்த கட்டமாக ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை அனைவரும் திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு யுத்தியை கையாண்டுள்ளனர்.

அதாவது வருகிற 6-ஆம் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் நடைபெற உள்ள கிரிக்கெட்போட்டியில் பங்கேற்கவுள்ள ராம்நாடு ரினோஸ் (‘Ramnad Rhinos’) அணியை வாங்கியுள்ளனர்.

இந்த அணி விஜய் சேதுபதி தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த அணியில் நடிகர்கள் பரத், போஸ் வெங்கட், ஜி.வி.பிரகாஷ், ஷாம், கௌதம் கார்த்திக் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு படத்தின் விளம்பரத்திற்காக நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இது தான் முதல் முறை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நட்சத்திர கலைவிழாவிலேயே ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடம் போன்று சிறு வேடத்தில் நடித்தாலும், இப்படத்தின் புரமோஷனுக்காக நிறைய நேரம் ஒதுக்கியிருக்கிறார்.

அட்டென்ஷன் ஜெய்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better