Search
Thursday 16 August 2018
  • :
  • :

ரஜினிக்கு பதில் விஜய்சேதுபதி

ரஜினிக்கு பதில் விஜய்சேதுபதி

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் முதல் படத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார்.

தொடர்ந்து விதார்த் நடித்த ‘குற்றமே தண்டனை’ விஜய்சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.

இந்நிலையில் அடுத்து விவசாயிகள் பற்றி ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த படத்திற்கு ‘கடைசி விவசாயி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ‘கடைசி விவசாயி’ கதையை இயக்குனர் மணிகண்டன், ரஜினியிடம் கூறினார் என்றும் இந்த கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்பதால், விஜய்சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’யை மணிகண்டன் இயக்க முடிவு செய்துள்ளார்.

மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த ‘யோகி’ பாபுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better