Search
Wednesday 12 December 2018
  • :
  • :

சர்கார் படத்தின் முக்கிய வில்லன் யார்?

சர்கார் படத்தின் முக்கிய வில்லன் யார்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த, ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஜானி. பார்வையினாலே மிரட்டிய அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்தப்படத்துக்குப் பிறகு அதர்வா நடித்த இரும்புக்குதிரை படத்தில் நடித்தார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’சர்கார்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜானி.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜானி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ராதாரவி, பழ கருப்பையா இருவரும் வில்லன் வேடம் ஏற்றிருந்தாலும் ஜானியின் கதாபாத்திரம்தான் சர்கார் படத்தில் மெயின் வில்லன் என்று சொல்லப்படுகிறது.

இவர் நடிப்பது படத்தில் முக்கியமான கேரக்டர் என்றும் எனவே இந்த கேரக்டர் குறித்த விவரங்களை ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்.

விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better