Search
Thursday 21 June 2018
  • :
  • :

முறுக்கு மீசையுடன் விஜய் ஆண்டனி…

முறுக்கு மீசையுடன் விஜய் ஆண்டனி…

பிச்சைக்காரன், சைத்தான் என எதிர்மறையான தலைப்புகளை தன்னுடைய படங்களுக்கு சூட்டி வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது ‘எமன்’ படம்.

‘எமன்’ படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி நடிப்பில்,  ஏற்கனவே ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கும் ‘எமன்’ படத்தில்  மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவா சங்கர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், கலை இயக்குநர் செல்வக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர்கள் அண்ணாமலை, பா  வெற்றி  செல்வன், கோ சேஷா, ஏக்நாத்ராஜ்  என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் கை கோர்த்துள்ள எமன் படத்தில் நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், அருள் டி சங்கர், சார்லி மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும்  நடித்திருக்கின்றனர்.

எமன் படத்தின் கதை என்ன…?

“இதுவரை வந்த அரசியல் படங்கள் அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்ட கூடியதாகத்தான் இருந்திருக்கின்றன.

ஆனால் ‘எமன்’ அரசியலை அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே சொல்லும் படம். ‘எமன்’ படத்தில்  முதல் முறையாக, முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.  நிச்சயமாக எங்களின் எமன், சிறந்ததொரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். ” என்று உற்சாகமாக கூறுகிறார் ஜீவா சங்கர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better