Search
Friday 14 December 2018
  • :
  • :

தயாரிப்பு வேண்டாம் என முடிவுக்கு வந்த விஜய் ஆண்டனி

தயாரிப்பு வேண்டாம் என முடிவுக்கு வந்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக இருந்த விஜய்ஆண்டனி சலீம் படத்தின் மூலம் நடிகராக மாறினார்.

சலீம் படம் தொடங்கி ‘திமிரு புடிச்சவன்’ படம் வரை தான் நடித்த படங்களை தன்னுடைய பேனரிலேயே தயாரித்து வந்தார்.

படத்தை எடுத்து முடித்த பிறகு தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமத்தை மொத்தமாக யாராவது ஒரு விநியோகஸ்தரிடம் விற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த பாணியில் படம் தயாரித்ததால் நிறைய லாபம் பார்த்தார். இந்நிலையில் அவர் தயாரித்த அண்ணாதுரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு 5 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திமிரு புடிச்சவன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் சுமார் 3 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே, இனி எந்த படத் தயாரிப்பு வேலைகளிலும், இசை அமைப்பு பணிகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன் என்றும் சமீபத்தில் உறுதிபட கூறியுள்ளார் விஜய் ஆண்டனி!

தொடர்ந்து விஜய் ஆண்டனி நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்த நான்கு படங்களையும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better