Search
Monday 24 September 2018
  • :
  • :

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் 62…

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் 62…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கொல்கத்தாவிலும் சில நாட்கள் நடைபெற்றது.

இப்போது இப்படத்திற்கான ஒரு பாடல்காட்சியை சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் படமாக்கி வருகிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நடன அமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடனமாடுகின்றனர்.

இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

அதன் பிறகு ஒரு பாடல் காட்சியை படமாக்க வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.

அதோடு விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better