Search
Sunday 18 November 2018
  • :
  • :

வெற்றிமாறனை மிரட்டும் வடசென்னை இயக்குநர்

வெற்றிமாறனை மிரட்டும் வடசென்னை இயக்குநர்

வடசென்னை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரம் அந்தப் படத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

குறிப்பாக வட சென்னையில் வாழும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த அமைப்புகள் வடசென்னை படத்துக்கு எதிராக கடுமையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் வெற்றிமாறன்.

அவருக்கு எதிராகப்போராடுவது மட்டுமல்ல வெற்றிமாறன் தொலைபேசி மிரட்டல்கள் வருகிறதாம்.

வடசென்னையில் வசிக்கும் ஒரு பிரபல இயக்குனர் இருப்பதாக வெற்றிமாறனுக்கு தெரியவந்திருக்கிறது.

இத்தனைக்கும் அவருடைய நெருக்கமான நண்பர்தான் அந்த இயக்குநர். வடசென்னை பகுதியில் தன்னை தலைவராக முன்னிறுத்தும் வகையில் வடசென்னை படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான விஷயத்தை அந்த பகுதி மீனவமக்களிடம் தூண்டிவிட்டு வருகிறாராம்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வெற்றிமாறன் அப்செட் ஆகி விட்டாராம்.

வடசென்னை படம் வெற்றி பெற்றதால் கலைப்புலி தாணு தயாரிப்பில் வடசென்னை-2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.

தற்போது இப்படம் தொடர்பாக தனக்கு மிரட்டல்களும் எதிர்ப்புகளும் அதிகரித்திருக்கும்நிலையில் வட சென்னை படத்தை தற்போது இயக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better