Search
Monday 18 December 2017
  • :
  • :

சிவகார்த்திகேயன், நயன்தாரா பாதுகாப்புக்காக 50 பவுன்சர்கள்…

சிவகார்த்திகேயன், நயன்தாரா பாதுகாப்புக்காக 50 பவுன்சர்கள்…

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் பெயரில் தயாரிக்கும் ‘வேலைக்காரன்’ படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்களுக்கு நன்றி கூறும் விதமாக மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக பல லட்சம் செலவில் செட் போடப்பட்டு படு ஆடம்பரமாக நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விருந்துக்கு மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் பணத்தை வாரியிறைத்து திரையுலகினரையே அதிர்ச்சியடைய வைத்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பாடல்களை டிசம்பர் 3- ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதை போலவே இந்தவிழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தேங்க்ஸ் மீட்டுக்கே 50 லட்சம் செலவு செய்தவர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்வார்கள்?

ஒரு கோடிக்கு மேல் செலவு செய்யும் திட்டத்தில் உள்ளனர்.

ஃபஹத் ஃபாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். இந்த தகவலை ரகசியமாக வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா பாதுகாப்புக்காக 50 பவுன்சர்களை இறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better