Search
Tuesday 24 April 2018
  • :
  • :

வேலைக்காரனுக்கு உதவிய இருவர்…

வேலைக்காரனுக்கு உதவிய இருவர்…

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியானது.

ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி என முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்ததினால் வேலைக்காரன் படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது.

50 கோடியில் திட்டமிடப்பட்ட படத்தின் பட்ஜெட் 65 கோடியானதால் எதிர்பார்த்த தொகைக்கு படத்தை பிசினஸ் செய்யமுடியவில்லை.

எனவே விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் பெற்று தமிழகம் முழுக்க டிஸ்ட்டிரிபியூஷன் அடிப்படையில் சொந்தமாகவே வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் அன்று 10 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது, வேலைக்காரன் படத்தின் மீது 4 கோடி கடன் கொடுத்த ஆர்.பி. சௌத்ரி 1 கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு மீதி 3 கோடியை பொன்ராம் இயக்கும் படத்துக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, ஓவர்சீஸ் வியாபாரி ஒருவர் பொன்ராம் இயக்கும் படத்துக்கு 8 கோடி விலைபேசி, 6 கோடி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த இருவரும் செய்த உதவியால்தான் வேலைக்காரன் சிக்கல் இல்லாமல் வெளியானது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better