Search
Sunday 18 November 2018
  • :
  • :

இன்று நள்ளிரவில் ‘வேதாளம்’ டீஸர்…?

இன்று நள்ளிரவில் ‘வேதாளம்’ டீஸர்…?

விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும், தொழில் ரீதியில் இருவரும் போட்டியாளர்கள்தான்.

அதை இருவருமே மறக்கவில்லை.

‘புலி’ படத்தின் டிரெய்லர் வெளியான அதே நாளில்தான் அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் டைட்டிலை அறிவித்தனர்.

இது அஜித்தின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது.

இந்நிலையில் விஜய் நடித்த ‘புலி’ படம் நாளை வெளியாகவிருக்கிறது.

கரெக்டாக ‘புலி’ வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் வெளியாகிறது.

‘புலி’ பட வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொருபுறம் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் இன்று இரவு 12.01 மணிக்கு வெளியிட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

‘வேதாளம்’ டீஸர் வெளியாகும் தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள அதே நேரத்தில் விஜய் ரசிகர்களின், உற்சாகத்தை குலைத்துவிட்டது.

இதற்கிடையில், ‘வேதாளம்’ டீஸர் இன்று இரவு வெளிவராது என இன்னொரு தகவலும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

காரணம்… சாய்பாபா பக்தரான ஏ.எம்.ரத்னம் எதைச் செய்தாலும் வியாழக்கிழமைதான் செய்வார். தவிர, விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

அதோடு, தேவையில்லாமல் விஜய், அஜித் ரசிகர்களிடையே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து மோதல் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு ‘வேதாளம்’ டீஸர் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மை நிலவரம் தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better