Search
Wednesday 26 September 2018
  • :
  • :

‘வேதாளம்’ படத்திலும் சொந்த குரலில் ஸ்ருதிஹாசன்…!

‘வேதாளம்’ படத்திலும் சொந்த குரலில் ஸ்ருதிஹாசன்…!

நடிக்க வருவதற்கு முன்பே பாடகியாக தன் திறமையை நிரூபித்தவர் ஸ்ருதிஹாசன்.

இசையில் நாட்டமும் திறமையும் கொண்ட ஸ்ருதிஹாசான், நடிகையான பிறகு பின்னணிப்பாடும் வாய்ப்பு வந்தால் மறுக்காமல் பாடி வந்தார்.

அதிலும் தான் நடிக்கும் படத்தில் பாடலைப்பாட அழைத்தால் உற்சாகமாகப் பாடி வருகிறார்.

சமீபத்தில் வெளியான ‘புலி’ படத்தில் கூட சொந்தக்குரலில் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

நடிகர் விஜய் உடன் ஸ்ருதிஹாசன் பாடிய அந்தப் பாடல் சூப்பர்ஹிட்டாகி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அஜித் உடன் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்திலும் சொந்தக்குரலில் ஒரு பாடல் பாட இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

அனிருத் இசையில் விரைவில் இந்தப்பாட்டு ஒலிப்பதிவு செய்யப்பட இருக்கிறது.

ஸ்ருதிஹாசன் பாடும் இந்தப்பாடலை இத்தாலியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ‘வேதாளம்’ படத்தின் இயக்குநரான சிவா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better