Search
Thursday 16 August 2018
  • :
  • :

சாதனை மரம் ஏறிய ‘வேதாளம்’…!

சாதனை மரம் ஏறிய ‘வேதாளம்’…!

அஜித்தை வைத்து ஏற்கனவே ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்து வரும் அவரது 56 ஆவது படத்துக்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

பல தலைப்புகள் வதந்திகளாக உலா வந்தநிலையில், நேற்று இரவு 12 மணிக்கு ‘வேதாளம்’ என்று தலைப்பை சூட்டியுள்ளனர்.

ரசிகர்களின் கணிப்பில் இருந்து வந்த பல்வேறு தலைப்புகளை தவிர்த்து விட்டு யாருமே கணிக்காதவகையில் ‘வேதாளம்’ என்ற டைட்டிலை வைத்ததோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுவிட்டனர்.

அஜித்தின் கெட்-அப் வித்தியாசமாக அமைந்துள்ளது என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்த கெட்-அப் அஜித் ஏற்கெனவே நடித்த ‘ரெட்’ படத்தின் கெட்டப்பை ஞாபகபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘வேதாளம்’ படத்தை கொண்டாடத் தயாராகிவிட்டனர் தல ரசிகர்கள்.

‘வேதாளம்’ என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு 12 மணிக்கு வெளியானதும் உலக அளவில் ட்விட்டர் டிரெண்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

இந்தப் படத்திற்கு முன் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நேரத்திலும் அது ட்விட்டரில் டிரென்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தது.

படத்தின் தலைப்பு பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்து அதன் பிறகு தலைப்பை அறிவிப்பது படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி என்பதை அஜித் புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better