Search
Thursday 16 August 2018
  • :
  • :

அஜித் ரசிகர்களின் ‘வி’ எழுத்து சென்ட்டிமெண்ட்…!

அஜித் ரசிகர்களின் ‘வி’ எழுத்து சென்ட்டிமெண்ட்…!

திரைப்பட உலகமே சென்ட்டிமென்ட்டில் இயங்குவதுதான்.

அதிலும் குறிப்பாக தமிழ்சினிமாவில் இந்த சென்டிமென்ட் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதனாலோ என்னவோ அந்த வியாதி ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது போலிருக்கிறது.

தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘வேதாளம்’ என தலைப்பு வைக்கப்பட்டதை பலரும் ரசிக்கவில்லை.

அதிலும் ‘புலி’ படம் வெளியான பிறகு ‘வேதாளம்’ என்ற தலைப்பு நகைப்பிற்கிடமாகி வருகிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களோ ‘வேதாளம்’ படம் சூப்பர்ஹிட்டாகும் என உற்சாகத்தில் வளைய வருகின்றனர்.

என்ன நம்பிக்கையில் இப்படியொரு ஆருடத்தை சொல்கிறார்கள்?

அஜித் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கும் படங்கள் வெற்றியடைந்துள்ளனவாம்.

அந்த அடிப்படையில் ‘வி’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ‘வேதாளம்’ படமும் வெற்றியடையும் என்று அஜித் ரசிகர்கள் நம்புகின்றனர்.

வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம் என இதுவரை ஐந்து ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கும் படங்களில் நடித்துள்ளார் அஜித்.

இதில் ‘வான்மதி’, ‘வீரம்’ ஹிட் படங்கள்.

‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்.

எனவே சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வேதாளம்’ படத்திலும் இந்த சென்டிமென்ட் ஒர்க்-அவுட்டாகும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

பகுத்தறிவுக்குப் புறம்பாக இல்லையா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better