Search
Sunday 21 October 2018
  • :
  • :

‘திமிரு’ ஸ்ரேயா ரெட்டி… ‘சண்டக்கோழி-2’ வரலட்சுமி

‘திமிரு’ ஸ்ரேயா ரெட்டி… ‘சண்டக்கோழி-2’ வரலட்சுமி

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி-2’.

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடிக்கிறார் ராஜ்கிரண்.

வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதன் காரணமாகவே சண்டக்கோழி -2 படத்தில் ஒரு பெண் கேரக்டரை உருவாக்கியுள்ளனர்.

அதை முன்மாதிரியாக வைத்து சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்ன தெரியுமா?

திமிரு படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டியை பின்னர் விஷாலின் அண்ணன் அஜய் திருமணம் செய்து கொண்டார்.

சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமியைத்தான் விஷால் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.

இந்த படம் ஆயுதபூஜை விடுமுறை வெளியீடாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better