Search
Tuesday 13 November 2018
  • :
  • :

வரலட்சுமி இப்ப அப்டேட்ஸ் லட்சுமி…

வரலட்சுமி இப்ப அப்டேட்ஸ் லட்சுமி…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் பழ.கருப்பையாவின் மகளாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

சர்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி இல்லை. முக்கிய வேடத்தில்தான் நடிக்கிறார்.

அதேபால் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாரி-2’ படத்திலும் கூட முக்கியமான வேடத்தில்தான் நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் ட்விட்டரில் தெரிவிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்!

கடந்த வாரம் ‘சர்கார்’ படத்திற்காக டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக அறிவித்திருந்தார்.

இப்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘மாரி-2’ படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்ட தகவலையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

‘சர்கார்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறுது. ‘மாரி-2’ டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better