Search
Tuesday 24 April 2018
  • :
  • :

‘வந்தா மல’ – விமர்சனம்…!

‘வந்தா மல’ – விமர்சனம்…! ‘வந்தா மல’ – விமர்சனம்…!

அக்கா புருஷன் மீது காதல் வயப்படும் மச்சினி பற்றிய ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய இகோரின் இரண்டாவது படம்.

முதல் படத்திலிருந்து முற்றிலும் விலகி வேறு ஒரு களத்தில் வெளையாடி இருக்கிறார்.

சென்னை சேத்துப்பட்டு ஏரியாவில் உள்ள ஏழைகளின் குடியிருப்புதான் கதைக்களம்.

தமிழ், பிரசாத், உதயராஜ், ஹிட்லர் நான்கு பேரும் நண்பர்கள்.

ஹோட்டல் வேலையிலிருந்து நீக்கப்பட்ட கோபத்தில், நால்வரும் கையேந்திபவனை ஆரம்பிக்கிறார்கள்.

பார்ட் டைமாக டூவீலரில் போய் செயின் அறுக்கிறார்கள்.

நால்வர் அணி ஒரு பெண்ணின் செயினை பறிக்க, அந்த செயினின் டாலருக்குள் ‘என்னை காப்பாற்றினால் 2 கோடி ரூபாய் கிடைக்கும்’ என்று எழுதப்பட்ட ஒரு பேப்பர் இருக்கிறது.

2 கோடி ரூபாய் பணம் கிடைத்தால் செட்டிலாகி விடலாம் என்ற பேராசையில், அந்த பெண்ணைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.

அந்த பெண்ணை காப்பாற்றினார்களா?

அவர்களுக்கு 2 கோடி ரூபாய் பணம் கிடைத்ததா? இல்லையா? என்பது மிச்ச கதை.

அதே பகுதியில் மாவு மில் வைத்திருக்கும் பிரியங்காவை தமிழ் காதலிப்பது தனிக்கதை.

தமிழைப் பார்க்கும்போதெல்லாம் மிளகாய்த் தூள் படிந்த உதட்டால் பச்சக் என அவரது உதட்டில் உம்மா கொடுப்பதும், காரம் தாங்காமல் தமிழ் அலறுவதும், அவரை துரத்தி துரத்தி பிரியங்கா உதட்டு முத்தம் கொடுப்பதுமாக ரகளையான லவ் எபிஸோட்.

நட்டு நடுராத்திரியில் வீட்டுக்கதவை தட்டி, இப்பவே கழுத்தில் தாலியைக்கட்டு என்கிற அளவுக்கு தமிழ் மீது பிரியங்காவுக்கு காதல் வெறி. இப்படி எல்லாம் ஒரு பெண் இருப்பாளா என்று யோசிக்க முடியாத அளவுக்கு தன் நடிப்பால் அசரடித்திருக்கிறார் பிரியங்கா.

நால்வரில் கவனத்தை ஈர்க்கிறார் தமிழ்.

‘வந்தா மல’ படத்தை மலை அளவுக்கு உயர்த்தி இருக்கிறது சாம் டி.ராஜின் இசை.

‘உன்னாண்ட காதல நான்…”, ‘அனா ஆவன்னா’ இரண்டு பாடல்களும் ஆடவும், பாடவும் வைக்கும்.

ஏழை, எளிய மக்களை சமூகம் இன்னமும் சந்தேகத்துடனே பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர்களை செயின் பறிப்பவர்களாகக் காட்டியதன் மூலம் சமூகத்தின் சந்தேகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது – ‘வந்தா மல’.

இகோரின் அடுத்தப்படத்தில் இந்தப் பார்வை மாற வேண்டும்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better