Search
Tuesday 17 July 2018
  • :
  • :

விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு?

விஜய்சேதுபதிக்கு பதில் வடிவேலு?

சினிமாவில் யார் எப்போது எப்படி மேலே வருவார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இவனெல்லாம் ஒரு ஆளா என துச்சமாக நினைக்கப்பட்ட எத்தனையோ பேர் இன்று நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள்.

இயக்குநர் நலன் குமாரசாமி குறும்பட இயக்குனராக இருந்தபோது வடிவேலுவை சந்தித்து கதை சொல்ல சென்றபோது அவரை சந்திக்க மறுத்திருக்கிறார் வடிவேலு.

தன்னுடைய அறிமுகப் படமான ‘சூது கவ்வும்’ படத்தில் கதாநாயகனாக, தாஸ் என்ற 40 வயது கடத்தல்காரராக வடிவேலுவையே நடிக்க வைக்க எண்ணினாராம் நலன்குமாரசாமி. அப்போது வடிவேலு உச்சத்திலிருந்ததால், நலன்குமாராசாமியை பார்க்கக்கூட மறுத்துவிட்டாராம்.

வேறு வழியின்றி வேறொரு நாயகனை நடிக்க வைக்கலாம் என நினைத்து, கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து விஜய்சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நலன் குமாரசாமி.
வித்தியாசமான ஐந்து கட்டளைகளோடு கடத்தலைச் செய்யும் தாஸ் கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஒருவேளை அன்றைக்கு தாஸ் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தால் ஹீரோவாகவே அவருக்கு மிகப்பெரிய ‘பிரேக்’ கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

எலி போன்ற படங்களில் நடித்து எனர்ஜியை வீண் அடித்திருக்க வேண்டியநிலையும் ஏற்பட்டிருக்காது.

இதைத்தான் விதி என்பதா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better