இன்றைய தேதியில் அதிக படங்களில் நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான்.
சுமார் பத்து படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.
‘ப்ரூஸ்லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படங்களின் இறுதிகட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ராஜீவ் மேனன், சசி, பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த படங்களுக்கு முன்னதாக, சரத்குமாருடன் இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
‘அடங்காதே’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இப்படங்களைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு பட இயக்குநர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
தற்போது வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்திருக்கிறது.
காமெடி கலந்த வில்லனாக நடிக்கவிருக்கிறார் வடிவேலு என்பதே அந்த தகவல்.