Search
Monday 22 October 2018
  • :
  • :

பார்ட்2 இல்லை ஒரே பாகமாக வடசென்னை

பார்ட்2 இல்லை ஒரே பாகமாக வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படம் அக்டோபர் 18 அன்று வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர்.

சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை முதலில் 3 பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டனர்.

என்ன காரணத்தினாலோ தற்போது ஒரே பாகமாக வட சென்னை படம் திரைக்கு வருகிறது.

ஃபைனல் எடிட்டிங் முடிவடைந்து ஃபர்ஸ்ட்காப்பிக்கு ரெடியான நிலையில் இன்னும் 3 காட்சிகளை படத்தில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று தனுஷ் கருத்துச் சொல்ல, அதன்படி சமீபத்தில் படப்பிடிப்பு நடத்தி 3 காட்சிகளை படத்தில் இணைத்துள்ளனர்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ள வடசென்னை படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்துள்ளார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனும், தனுஷும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது.

இந்த படம் வெற்றியடைந்தால், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better