Search
Thursday 20 September 2018
  • :
  • :

‘உப்பு கருவாடு’ படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்…!

‘உப்பு கருவாடு’ படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்…!

‘பயணம்’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கியுள்ள படம் படம் ‘உப்பு கருவாடு’.

ராதா மோகனின் ‘நைட் ஷோ பிக்சர்ஸ்’ நிறுவனமும் ராம்ஜி நரசிம்மனின் ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

காமெடி நடிகர் கருணாகரன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார்.

முழுநீள காமெடிப்படமாக உருவாகி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில், எம். எஸ். பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், சரவணன், ‘டவுட்’ செந்தில் என ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர்.

விரைவில் ரிலீசாக உள்ள இப்படம் இன்று தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காதல், நகைச்சுவை கலந்த ஜனரஞ்சக படமாக எடுக்கப்பட்டுள்ள ‘உப்பு கருவாடு’ படத்துக்கு ஒரு கட் கூட இல்லை.

அனைவரும் பார்க்க கூடிய படம் என்கிற ‘யு’ சர்ட்டிஃபிகேட் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு புகழ்பெற்ற கிட்டார் இசை கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார்.

இவர் இசை அமைக்கும் முதல் திரைப்படம் இது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better