Search
Monday 18 June 2018
  • :
  • :

பாலிவுட் வில்லனிடம் மீண்டும் கால்ஷீட் வாங்கிய ஆர்.கண்ணன்

பாலிவுட் வில்லனிடம் மீண்டும் கால்ஷீட் வாங்கிய ஆர்.கண்ணன்

கௌதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கி தயாரித்த ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ‘பூமராங்’.

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பூமராங் படத்தில் அதர்வா வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

தற்போது பூமராங் படம் பற்றி புதிய தகவல்..

ஷங்கரின் ‘ஐ’ பட வில்லன்களில் ஒருவராக நடித்த உபேன் பட்டேல் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இப்போது அந்த தகவலை ஆர்.கண்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

‘ஐ’ படத்தில் நடித்த உபேன் பட்டேல்தான் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, உபேன் பட்டேல் இருவரது பிட்னெஸ் மற்றும் இவர்கள் சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் ‘பூமராங்’ படத்தில் வேற லெவலில் இருக்கும்’’ என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டபோது இவருடைய கால்ஷீட்டுக்காகத்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சிறப்பு அனுமதி கேட்டார் ஆர்.கண்ணன்.

கவுன்சில் அனுமதி தரவில்லை. எனவே உபேன் பட்டேலிடம் நிலைமையை விளக்கி அடுத்த மாதம் முதல் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better