Search
Sunday 21 October 2018
  • :
  • :

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா

ஒளிப்பதிவாளரும், அறிமுக இயக்குநருமான பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள ‘96’ படம் அக்டோபர்-4 அன்று வெளியானது.

படவெளியீட்டுக்கு முன்னதாகவே இப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

பத்திரிகையாளர்களின் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அறிந்த தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து தயாரிக்க முன் வந்துள்ளார். இவரும், தெலுங்கு நடிகர் நானியும் சமீபத்தில் ‘96’ படத்தை பார்த்துள்ளார்கள்! இந்தப்படம் இருவருக்கும் பிடித்துபோனததால் பெரியவிலை கொடுத்து ‘96’ படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளார் தில் ராஜு.

96 படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடிக்கிறார்.

கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better