Search
Sunday 23 September 2018
  • :
  • :

“தூங்காவனம்” படத்தின் கதை யாருடையது…?

“தூங்காவனம்” படத்தின் கதை யாருடையது…?

‘உத்தமவில்லன்’ படத்தை அடுத்து கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் – ‘தூங்காவனம்’.

த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சந்தானபாரதி உட்பட பெரும் நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.

கமலிடம் பல வருடங்களாக உதவியாளராக இருந்த ராஜேஷ் எம். செல்வா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

‘தூங்காவனம்’ படத்தின் கதை அவருடையது அல்ல. ராஜேஷ் எம். செல்வா இயக்குநர் மட்டுமே.

கமல்ஹாசன் இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார்.

வசனத்தை சுகா எழுதி இருக்கிறார்.

அப்ப கதை யாருடையது?

அதைத்தான் கமல்ஹாசன் ரகசியமாக வைத்திருக்கிறார்.

எதற்கு ரகசியம்?

‘ஸ்லீப்லெஸ் நைட்’ என் பிரஞ்சுப்படத்தின் தழுவல்தான் ‘தூங்காவனம்’ படம்.

தழுவல் என்றால்…. கதையை சுட்டிருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

‘ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் கதையை ரைட்ஸ் வாங்கி ‘தூங்காவனம்’ படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ‘தூங்காவனம்’ படத்தின் கதை குறித்த சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் ரகசியம் காக்கிறார்களாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better