Search
Wednesday 17 January 2018
  • :
  • :

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தயாரிப்பாளர் யார்?

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தயாரிப்பாளர் யார்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.

முதல்முறையாக இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அவர் மட்டுமல்ல இசையமைப்பாளர் அனிருத்தும் சூர்யாவுடன் முதல்முறையாக இணைந்திருப்பது இந்தப் படத்தில்தான்.

இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஆடியோ ரைட்ஸை முன்னணி நிறுவனமான சோனி வாங்கியுள்ளது.

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை தயாரித்துள்ளன.

தற்போது திரைப்பட கூட்டமைப்பு ஞானேவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியவரவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.

இது உண்மையா பொய்யா என்பது தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும்போது தெரிய வரும்!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better