Search
Saturday 20 January 2018
  • :
  • :

படையெடுக்கும் தெலுங்கு படங்கள்… ஜாக்கிரதை ரசிகர்களே…!

படையெடுக்கும் தெலுங்கு படங்கள்… ஜாக்கிரதை ரசிகர்களே…!

சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா முன்னணி ஹீரோக்களாக இருந்த போது அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் டப்பிங் செய்து வெளியாகி வந்தன.

அதன் பிறகு தெலுங்கில் இளம் தலைமுறை ஹீரோக்கள் தலையெடுக்க ஆரம்பித்த பிறகு தெலுங்குப்படங்கள் அவ்வளவாக தமிழில் டப் செய்யப்படுவதில்லை.

அபூர்வமாக எப்போதாவது ஒரு சில படங்கள் மட்டுமே டப் செய்யப்படும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டும் நேரடி தெலுங்குப்படங்கள் வெளியாகின்றன.

தெலுங்கு ஹீரோக்களின் படங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை என்றாலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப் படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு.

அதனால் இவர்கள் நடித்த அனைத்து படங்களும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருவது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படம் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியைப் பார்த்து தெலுங்கு திரையுலகம் சுதாரித்துக் கொண்டுவிட்டது.

இனி முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களை தமிழில் ‘டப்’ செய்து விட முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாகவே மகேஷ்பாபு நடிப்பில் உருவான தெலுங்குப் படமான ‘ஸ்ரீமந்துடு’, தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சுமார் அரைடஜன் தெலுங்குப்படங்கள் தமிழ் பேச தயாராகி வருகின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better