Search
Sunday 21 October 2018
  • :
  • :

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சிக்கல்…

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சிக்கல்…

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தனா சேர்ந்த கூட்டம்’.

சூர்யா, கீர்த்தி சுரேஷுடன் ரம்யாகிருஷ்ணன், சுரேஷ் மேனன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ், கார்த்திக் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

‘தனா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு பக்கம், இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகளும் இன்னொரு பக்கம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற் வருகின்றன.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில் திரைப்படக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதிக்குள் இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி ஞானவேல்ராஜாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார் சூர்யா.

ஒருவேளை பிரச்சனை தீரவில்லை என்றால், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பரங்களில் இருந்து ஞானவேல்ராஜா பெயரை நீக்கிவிட்டு தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாரரம் சூர்யா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better