Search
Sunday 19 August 2018
  • :
  • :

குதிரை ஏறிய நீலப்பட நடிகை

குதிரை ஏறிய நீலப்பட நடிகை

பரத் நடித்த பொட்டு படத்தை அடுத்து வி.சி.வடிவுடையான் இயக்கும் படம் ‘வீரமாதேவி’.

நீலப்பட நடிகையான சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் துவங்கியது.

சரித்திர கதையான இப்படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பை துவக்கினார்கள்.

முதல்நாள் படப்பிடிப்பில் சன்னிலியோன் குதிரையில் சவாரி செய்வதுபோல் காட்சி படமாக்கப்பட்டது.

ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் பல வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீரமாதேவி’ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதால் இந்தப் படத்தை தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better